Friday, 30 September 2011

கண்ணதாசன் கவிதை

கண்ணதாசன் கவிதை


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் 
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் 
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன் 
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் 
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன் 
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன் 
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் 
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி 
'
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

Monday, 26 September 2011

Earn upto Rs. 9,000 pm




Earn upto Rs. 9,000 pm with PaisaLive.com!

Hi ,
I have something interesting for you - you can easily earn regular income online via PaisaLive.com!
It’s really amazing! You get paid to open & read the contents of PaisaLive mails. You also receive special discount coupons, promotions and free passes to various events in your city.
Join now and get Rs. 99 instantly, just for joining. What more, as a special bonus you get paid for inviting your friends also!
Create your PaisaLive Account & refer your friends to earn launch referral bonus on every new registration.
PaisaLive - Get Paid to read emails
{arunbai}


நீங்கள் நினைத்ததை அடைய -பகுதி 4

நாம் எல்லோருக்கும் பிரச்சினை இங்குதான் உள்ளது , நாம் எப்போதும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும்தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம் ,பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம் .

நீங்கள் சிந்திக்கும் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளையும் உற்று கவனித்து கொண்டே இருங்கள் , ஏன் என்றால் நீங்கள் உங்களுக்கு தேவையானதைவிட,எது தேவை இல்லையோ அதை பற்றிதான் யோசித்து கொண்டிருப்பதும், பேசிகொண்டிருப்பதும் தெரிய வரும், நீங்கள் ஒரு எண்ணத்தை நினைகிறீர்கள் என்றால் அது நல்லதா கேட்டதா என்றெல்லாம் ஈர்ப்பு விதி சட்டை செய்வதில்லை ,அது வெறுமனே உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப இயங்குகிறது .
ஈர்ப்பு விதி ஒரு இயற்கை விதி ,அது உங்களது எண்ணங்களை பெற்றுக்கொண்டு அதையே உங்களது வாழ்க்கையின் அனுபவங்களாக உங்களுகே திருப்பி அனுப்பும் , நீங்கள் என்ன என்னிகொண்டிருகிறேர்களோ அதை அப்படியே உங்களுக்கு திருப்பி கொடுக்கும் ஒரு விதியாகும் .

ஈர்ப்பு விதி என்பது மிகவும் கீழ்படிதல் உள்ள விதி 
நான் இனி கடன் வாங்க மாட்டேன் என்பதை பற்றி நீங்கள் சிந்தித்து கொண்டிருந்தால் , உடனே விதியானது நீங்கள் எதை சிந்தித்து கொண்டு இருக்கீரீர்களோ ,அதை உங்களிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும் , அதற்கு நல்லது ,கேட்டது தெரியாது . 

நீங்கள் தவறான எண்ணங்களை சிந்திக்கும்போது அது அப்படியே எடுத்து கொள்ளும் ,அதற்கு சில உதாரணம் 

"
நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போக மாட்டேன் 
நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போவேன் "

"
இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியாது 
இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியும் "

"
எனக்கு காய்ச்சல் வரகூடாது "
எனக்கு காய்ச்சல் வர வேண்டும்" 


"
நான் இனி எந்த விசயத்திலும் தோற்க மாட்டேன் 
நான் இனி எந்த விசயத்திலும் தோர்ப்பேன் "

நீங்கள் நினைத்து கொண்டிருப்பதை ஈர்ப்பு விதி அப்படியே உங்களுக்கு திருப்பி அளிக்கிறது .

மொத்த பிரபஞ்சமுமே எண்ணத்திலிருந்து உதித்ததுதான் என்று குவாண்டம் இயற்பியலாளர்கள் கூறுகின்றனர் .

நாம் எல்லா சமயங்களிலும் சிந்தித்து கொண்டு தான் இருக்கிறோம் ,நாம் பேசிக்கொண்டிருக்கும்போதும் ,டிவி பார்த்து பேசிக்கொண்டிருக்கும்போதும், கார் ஓட்டும்போதும் , வேலை செய்து கொண்டிருக்கும்போதும் ,நாம் சிந்திக்காத ஒரே நேரம் தூங்கும் நேரம் மட்டும்தான் ,ஆனால் நாம் தூங்க முயலும் பொது கடைசியாக நாம் சிந்தித்த வற்றை ஈர்ப்பு விதியானது , அசை போட்டு கொண்டிருக்கும் ,அதனால் நாம் தூங்க போகும் போது நல்ல எண்ணங்களை மனதில் நினைத்து விட்டு தூங்க வேண்டும். 

இன்றைய உங்கள் சிந்தனை நாளைய வாழ்க்கை ,நீங்கள் எவற்றை குறித்து அதிகமாக சிந்திக்கிறீர்களோ அவையே உங்களது வாழ்வாக மலரும் .நீங்கள் தான் உங்கள் வாழ்வை சிருஷ்டிகிறீர்கள் .நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள் .உங்களது எண்ணங்கள் தான் விதை .உங்கள் அறுவடை நீங்கள் விதைக்கும் விதையை பொறுத்துதான் இருக்கும்.

நீங்கள் நினைத்ததை அடைய -பகுதி 3


 நீங்கள் நினைத்ததை அடைய -பகுதி 3

உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் ,அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும் .-பாப் பிராக்டர் 

உங்களது தேவை என்னவோ அதை பற்றி நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால் , உங்களது அந்த எண்ணத்தை ஆதிக்க எண்ணமாக மாற்ற முடியும் என்றால் , கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை உங்களால் வாழ்வில் கொண்டு வரபோவது உறுதி .

ஆற்றல் மிக்க இந்த விதியின் மூலம் எண்ணங்கள் பௌதீக பொருட்களாக பரிணமிக்க போகின்றன .

எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் பயணிக்கும் என்று பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்வதில்லை ,நாம்மால் எண்ணத்தை அளவிட முடியும் ,நாம் நமக்கு தேவையான விசயத்தை பற்றி திரும்ப திரும்ப எண்ணிகொண்டே இருக்க வேண்டும் , நான் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் , பெரிய வீடு வாங்க வேண்டும் ,கார் வாங்க வேண்டும் ,நீங்கள் இது போல தொடர்ந்து எண்ணிகொண்டே இருக்கும்போது ,நீங்கள் தொடந்து அதன் எண்ணங்களை ஒரு குறிபிட்ட அலைவரிசையில் வெளிப்படுத்தி கொண்டு இருக்கறீர்கள் .எண்ணங்கள் அந்த காந்த சமிகைகளை வெளியே அனுப்பி அவற்றிற்கு இனையானவற்றை உங்களிடம் ஈர்க்கின்றன.

எண்ணங்கள் காந்த சக்தி உடையவை ,நீங்கள் சிந்திக்கும் போது எண்ணங்கள் குறிபிட்ட அலைவரிசையில் பிரபஞ்சதினுள் அனுப்பபடுகின்றன ,அவை அதே அலைவரிசையில் உள்ள அணைத்து விசயங்களையும் ஈர்க்கின்றன ,பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொன்றும் திரும்ப அதன் மூலத்துக்கே அனுப்பப்படும் ,அந்த மூலம் தான் நீங்கள் .

உதரணமாக நாம் தொலைகாட்சி நிகழ்சிகளை நாம் பார்க்கிறோம் , அது எப்படி நம் டிவியை வந்து சேர்கிறது , அதன் ஒளிபரப்பு நிலையத்தில் இருந்து , ஒளிபரப்பபடுகிறது , நாம் வீட்டில் நமக்கு எந்த சேனல் தேவையோ அதற்கு ஏற்ற சேனல் மாற்றும் போது அது சம்பந்தமான அலைகளை உள்வாங்கி நமக்கு படமாக காண்பிக்கிறது டிவி .

இதே போல மனிதனும் ஒரு ஒளிபரப்பு கோபுரம் தான் ,அதாவது சிக்னல்களை வெளியே அனுபிகொண்டு இருக்கும் ஒரு உயிர் உள்ள ஒளிபரப்பு கோபுரம் தான் , நாம் எந்த மாதிரி அலைகளை வெளியே அனுப்புகிறோமோ அதற்கு ஏற்றார் போல நமது வாழ்க்கை அமைகிறது , ஏன் என்றால் நாமிடம் இருந்து எந்த மாதிரி அலைவரிசை வெளியே போகிறதோ, அதே மாதிரி தான் நமக்கு எல்லாமும் வந்து சேரும் .

உங்களது வாழ்வில் இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் காட்சிகள் அனைத்தும் , உங்களிடம் இருந்து வெளியே போன எண்ணங்கள் கவர்ந்து இழுத்தவையே ,உங்கள் வாழ்கையில் நீங்கள் எதாவது மாற்ற விரும்பினால் , முதலில் நீங்கள் வெளிப்படுத்தி கொண்டிருக்கும் எண்ணங்களின் அலைவரிசையை மாற்ற வேண்டும் .


எப்போதும் நல்ல எண்ணங்களையே சிந்தியுங்கள் .

நாம் எல்லோருக்கும் பிரச்சினை இங்குதான் உள்ளது , பெரும்பாலான மக்கள் எல்லோரும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும்தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம் ,பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம் .

இதை பற்றி இன்னும் விரிவாக அடுத்த தொடரில் பார்க்கலாம் .

 

நீங்கள் நினைத்ததை அடைய -பகுதி 2


நீங்கள் நினைத்ததை அடைய -பகுதி 2

 ஈர்ப்பு விதியின் இயக்க நிதிக்கு ஒரு உதாரணம் :
மிகபெரும் பணக்காரர்கள் எல்லோரும் தங்களது செல்வங்களை இழந்தவுடன் , மிக குறுகிய காலத்திலேயே அவைகளை திரும்ப பெற்று விடுகிறார்கள் , இவர்களைபோன்றவர்களை பற்றி நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள் , இப்படிப்பட்டவர்கள் உணர்ந்து இருந்தார்களோ இல்லையா தெரியாது !அவர்களுடைய எண்ணங்கள் முழுவதையும் செல்வங்கள் மட்டும் ஆக்கிரமித்து இருக்கும் .அதாவது உங்களது எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் இவ்விதி அதற்கு ஏற்றவாறே இயங்கும் .

ஒத்தவை ஒத்வைற்றையே ஈர்க்கும் 
ஈர்ப்பு விதி என்பது என்னை பொறுத்தவரை , நான் என்னை ஒரு காந்தமாக எண்ணி கொள்வதற்கு ஒப்பானது .-ஜ்ஹோன் அசரப் 

சுலபமா சொல்றேன் கேளுங்க ....
உங்களுடைய நண்பர்களை எல்லோரையும் பாருங்கள் நீங்கள் எல்லோரும் ஒத்த எண்ணங்கள் உள்ளவர்களாக இருப்பீர்கள் , அதே உங்களுடைய எண்ணத்திற்கு எதிரான எண்ணங்கள் உள்ளவர்களுடன் நீங்கள் நெருங்கி பழக மாட்டீர்கள் ,அன்னாஹசாரே ஊழலுக்கு எதிராக போராட ஆரம்பித்தவடன் எப்படி இந்தியாவில் உள்ள லட்சகணக்கான மக்கள் ஒன்று திரண்டு அவருக்கு கை கொடுத்தார்கள் , இங்கே பாருங்கள் அன்னா ஹசாரே -வின் எண்ணமும் மக்களின் எண்ணமும் ஒன்றாக இருந்த காரணத்தால் சுலபமாக அவர்களை அவரால் ஈர்க்க முடிந்தது , உங்களது வாழ்கையிலும் இந்த ஈர்ப்பு விதியின் தாக்கத்தை உணர்ந்து இருக்க கூடும் , உங்கள் நடந்த சோகமான நிகழ்வுகளை பற்றி நீங்கள் எண்ண ஆரம்பித்தவுடன் , அது தொடர்பாக மேலும் சோகமான நினைவுகள் உங்களுக்கு வர ஆரம்பித்திருக்கும் ,நீங்கள் நீடித்து இருக்கும் ஒரு எண்ணங்களை பற்றி எண்ணும்போது,ஈர்ர்பு விதி உடனடியாக அதனுடன் ஒத்த எண்ணங்களை உணக்ளுக்கு கொண்டு வந்து சேர்க்கும் ,அதனால் நீங்கள் மேலும் சோகமாக மாறுகிறீர்கள்.

எந்திரன் படத்தில் உள்ள கிளிமஞ்சாரோ பாடலை நீங்கள் கேட்கும்போது உடனே உங்களது மன திரையில் ரஜினியும் ,ஐஸ்வர்யாராயும் ஆடுவதும் , இந்த பாடல் படம் ஆக்கப்பட்ட விதம் குறித்து டைரக்டர் ஷங்கர் அளித்த பேட்டி உங்களுக்கு எப்படி நினைவுக்கு வருகிறது ?,நீங்கள் எதன் மீது கவனத்தை செலுத்துகிறீர்களோ அது சம்பந்தமாக விசயங்களை ஈர்ப்பு விதி உங்களிடம் கொண்டு வந்து சேர்த்து விடும் .

நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமக்கு என்ன தேவையோ அது குறித்த எண்ணங்களை நம் மனதில் விடாபிடியாக பிடித்து கொண்டிருப்பதோடு ,அவை குறித்த முழுமையான தெளிவையும் நம் மனதில் இறுதி கொள்ள வேண்டும் ,அப்பொழுது நீங்கள் எதை குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டு இருக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் ஆகி விடுவீர்கள்.

நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய் .- சுவாமி விவேகனந்தர் . 

இன்றைய உங்களது வாழ்க்கை உங்களது கடந்த கால எண்ணங்களின் பிரதிபலிப்பே , அதில் நல்லவையும் அடங்கும் கெட்டவையும் அடங்கும் ,நீங்கள் அதிகமாக யோசிக்கும் விசயங்களை உங்களின் பக்கம் ஈர்ப்பதால் ,உங்களின் வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் அந்த எண்ணத்தின் ஆக்கிரமிப்பு அடங்கியுள்ளது என்பதை நீங்களே உணரலாம் .

உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் ,அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும் .-பாப் பிராக்டர்


 

தந்திரம் பழகுவோம்


தந்திரம் பழகுவோம்

நமது வாழ்க்கையின் பல தருணங்களில் நாம் மற்றவர்களோடு சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.அவர்களில் சிலரிடம் நாம் எப்படி கவணத்தோடு இருக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.நாம் சிலரைப் பற்றி இப்படி கேள்விப்பட்டிருக்கலாம் ,வாயிலே பந்தல் போடுகிறான் என்று வேறு சிலரைப் பற்றி இப்படிக் கேள்விப்பட்டிருக்கலாம் , சர்க்கரை வாயன் என்று நாம் இன்று காணப்போவது இப்படிப்பட்ட பேச்சு மயக்கி எனப்படும் மனிதர்களைப் பற்றித்தான்.


                                                                     

மனிதனது சிந்தனையை எடுத்துக் கொண்டோம் என்றால் ,மனிதன் எல்லா சிதனைகளையும் படமாக தனது மனதில் எண்ணுகிறான்.சில திறமை வாய்ந்த பேச்சு மயக்கிகள் நமது வாழ்வின் பல கட்டங்களில் சந்திக்க வேண்டி வரும் .சரி அதனால் தான் என்ன சந்தித்து விட்டுப் போவோமே? என்றால் அதற்கு கொடுக்கப்படும் விலைகள் பற்றிக் கவலைகள் இல்லயென்றால் அதுபற்றி கவலை இல்லை என்பவர்களை பற்றி ஒன்றும் இல்லை .ஆனால் சில விலைகள் நாம் மீள முடியா இடத்திற்கு நம்மை கொண்டு சென்று விடும்.
சரி இந்த பேச்சு மயக்கிகள் என்னசெய்வார்கள் ?எப்படி இருப்பார்கள் ?இவர்கள் பெரும்பாலும் கலகலவென்று பேசும் குணமுடையவர்களாக மற்றவர்களால் சொல்லும் படி பேசுவார்கள் .இவர்களை சுற்றி எப்பவும் ஒரு கூட்டம் இருக்கும்படி செய்து கொள்ளுவார்கள் .இந்தக் கூட்டம் தான் இவர்களது உணவு ,இந்தக் கூட்டத்தில் இருந்துதான் தங்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளை பெற்றுக் கொள்வார்கள் .இவர்களது பேச்சு முழுவதும் இவர்களுக்கு தெரிந்த விசயத்தைப் பற்றி மட்டுமே இருக்கும்.அந்த விசயங்களில் தங்கள் ஒரு கதாநாயகன் போலக் படம் காட்டிக் கொள்வார்கள் ,கொஞ்சம் கொஞ்சமாக உங்களது மனதில் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப் பாண்மையை படமாக ஏற்படுத்தி விடுவார்கள் .பின்பு தங்களது மன விருப்பத்தின் படி நீங்கள் ஆட்டுவிக்கும் நிலைக்கு வந்தவுடன் உங்களை அவ்ர்களது வாழ்வின் வெற்றிக்கு ஒரு படிக்கல்லாக ஆக்கி விடுவார்கள் .
இவர்களிடம் மாட்டிக் கொள்ளும் இளம் பெண்கள் கதை அதோ கதி தான் ,இவர்களது பேச்சில் மயங்கி இவர்கள் புருடாவாக விடும் சில கற்பனை நிகழ்ச்சிகளில் இந்த பேச்சு மயக்கிகளை ஒரு கதாநாயகன் போன்று எண்ணி தங்களது வாழ்வை தொலைத்த இளம் பெண்கள் அநேகம் பேர்
சரி இவர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி?முதலில் இப்படிப் பட்ட குணநலன்கள் கொண்ட மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் .அப்புறம் எவராவது நாலு பேர் கூடி உள்ள இடங்களில் தங்களை பற்றி பெருமையாகவும் ,அவர்களுக்கு தெரிந்த விசயங்களை பற்றி மட்டும் பேசிக் கோண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களை விட்டு விலகுங்கள், அவர்களது பேச்சை கேட்பதால் உங்களுக்கு நட்டம் பின்னாலேயே இருக்கின்றது என்பதை உணருங்கள்.அளவில்லாத நகைச்சுவை உணர்வுகளையும் இவர்கள் ஆயுதமாக கொண்டிருப்பார்கள் .இவர்களது நகைச்சுவைக்கு பின்னால் என்ன நோக்கம் இருக்கிறது என்று ஆராய்ந்து பாருங்கள் .முடிந்த வரை அவர்களது பேச்சுத்தொனியை நம்பி அவர்களை கதாநாயகன் என்று நம்பி விடாதீர்கள் அப்படி நம்பி விட்டீர்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டார்கள் என்றால் அந்த நம்பிக்கையிலேயே உங்களை ஓரம் கட்டி விடுவார்கள்அல்லது உங்களை அவர்கள் வாழ்க்கை உணவாக்கி விடுவார்கள் . நீங்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் கூட.
இப்படிப்பட மனிதர்களிடம் நடந்து கொள்ளும் முறை பற்றி நாமும் தெரிந்து கொண்டு நமது குழந்தைகளுக்கும் இதனை கற்றுக் கொடுப்போம். 

நண்பர்களை சோதனை செய்யுங்கள்.


நண்பர்களை சோதனை செய்யுங்கள்.

நல்ல நண்பர்கள் என்பவர்கள்  நமது வாழ்வில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மோடு இணைந்து நமக்கு துண்பம் வரும் வேளையில் துணையாகவும் ,தகுந்த காலங்களில் நல்ல அறிவுரை கூறுபவர்களாகவும்,தவறான வழிகளை நாம் மேற்கொள்ளும் போது தவறை இடித்து உரைத்து நல்வழி உணர்த்துபவர்களாகவும் இருக்க வேண்டும்.

                                                                          
இப்படி நட்புக்கு இலக்கணம் கூறப்பட்டிருந்தாலும் நல்ல நண்பர்களை இனம் காணும் திறமையை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும் .

கல்விச் சாலைகள்,பணிபுரியும் இடங்கள்,உறவுப் பாலம் வழியாக,இது தவிர வேறு வழிகள் மூலமாக,இந்த வழிகளில்  உள்ள நபர்கள்  ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆகவும்  ,மாற்று பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆகவும் தான் நட்பு முகத்தோடு நம்மை அனுக முடியும்.

இவர்களில் நல்ல நண்பர்களை ஆய்ந்து கொள்ளும் முறைகள் தான் என்ன?நம்மிடம் மட்டும் ஆன உதவிகளைப் பெற்றுக் கொண்டு,கழற்றி விடுகின்ற ரகமா?

நமது பலவீனங்களைப் புரிந்து கொண்டு நம்மை அவர்கள் வாழ்விற்கு நம்மை அறியாமல் பயன்படுத்துகின்ற ரகமா?ஆபத்துக்காலத்தில் ஒடிவிடுகின்ற ரகமா?கூட இருந்தே கெடுக்கின்ற ரகமா?மகிழ்ச்சியை மட்டும் பங்கு கொள்கின்ற ரகமா?இப்படி பல வழிகளில் நண்பர்களை ஆய வேண்டும்.

உங்கள் நண்பர் பண விசயத்தில் எப்படி?
நீங்களும் உங்கள் நண்பரும் ஒரு விடுதிக்கு சாப்பிடச் செல்கின்றீர்கள் ,உங்கள் நண்பரும் பணம் வைத்திருக்கின்றார் நீங்களும் வைத்திருக்கின்றீர்கள் ,

சாப்பிட்ட பணம் கொடுக்கும் பொழுது நீங்கள் நட்பின் உந்துதல் காரணமாக பணத்தை நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என்று சர்வர் எப்பொழுது பில்லை வைப்பார் என்று காத்துக் கொண்டிருக்கின்றீர்கள் ,

உங்கள் நண்பரும் அதே போல காத்திருந்து பணத்தை நான் தான் கொடுப்பேன் என்று வம்பு செய்தால் அவர் பணவிசயத்தை விட நட்பை, உங்களை மதிக்கின்றார் என்று பொருள்.

ஆனால் சர்வர் வரும் நேரத்தைக் கணக்கிட்டு வேறு ஏதாவது காரியத்தில் கண்ணாக இருப்பது போல் பாசாங்கு செய்கின்றாரா?என்பதைக் கவணிக்க வேண்டும் .

                                                                             
சிலர் போன் பேசுவது போலவும்,தலையைத் திருப்பிக் கொண்டு தீவிரமாகச் சப்பிடுவது போலவும் இருந்தால் இப்படிப்பட்ட நபர் பண விசயத்தில் கெட்டி.

இவர்களை சரியாக மேலாண்மை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்கு துன்பத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

சில சமயங்களில் நண்பரிடம் பணம் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு நாமே அவர்களை கூட்டிக் கொண்டு சென்றிருந்தால் ,முதலில் அவர்கள் நம்முடன் வர கண்டிப்பாக மறுப்பார்கள்

நாம் வற்பறுத்தி கூட்டிச் சென்றாலும் எவ்வளவு பழகி இருந்தாலும் ஒரு சங்கோசத்துடன் இருப்பார்கள் அளவுடன் நடந்து கொள்ளுவார்கள்.

இதனை நினைத்துக் கொண்டே உங்களுக்கு ஏதாவது ஒரு பொருளை சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது வாங்கிக் கொடுப்பார்கள்.

இல்லை       என்றால் உங்களை ஒருநாள் நீங்கள் எதிர்பாராமல் சாப்பிட அழைத்துச் செல்வார்கள் .இவர்கள் பண விசயத்தில் நல்ல நண்பர்கள்.

இப்படி பணம் சம்பந்தமாக முதலில் நண்பர்களை ஆய்ந்து தெளிய வேண்டும் .உங்கள் எண்ணத்திற்கு சரி வராதவர்களை ஒதுக்கக் கூடாது ,அவர்களை விட்டு தள்ளியும் இருக்கக்கூடாது .அவர்களுடன் இருந்து கொண்டே மேலாண்மை செய்யுங்கள் .

இந்த அவசர உலகில் ஒரு முறை ஏற்பட்டு விட்ட நட்பு அறிமுகம் எப்பொழுதாவது  உபயோகமாக இருக்கும்.இல்லையென்றால் உங்களுக்கு தேவையான வேறு திறமைகள் கொண்டவராக இருக்கலாம் .அதனைத் தெரிந்து தெளிவு பெறவும்.

ஆபத்துக் காலத்தில் உதவுவாரா?இல்லை ஓடி ஒளிந்து விடுவாரா?
ஆபத்துக் காலத்தில் உதாவாதவன் நண்பனே கிடையாது .இப்படிபட்டவர்களை எப்படி தேர்ந்து தெளிவது.

திடீரென்று ஒரு நாள் உங்கள் நண்பனிடம் பொய் ஒன்றை சொல்லுங்கள் .உங்களுக்கு தனிப்பட்ட வாழ்வில் ஒரு மூன்றாம் நபரால் ஆபத்து வரப் போகின்றது என்று?அந்த ஆபத்து உங்கள் நண்பரைக் கூட பாதிக்கலாம் என்று சொல்லுங்கள்.

நீங்கள் சொன்னதை கேட்டவுடன் உங்களுக்கு நேரப் போகும் ஆபத்தைப் பற்றி ஆலோசணை கூறும் நோக்கத்தோடு அது பற்றி உங்களிடம் கேட்டு ,அந்த ஆபத்தை எதிர் கொள்ள வேண்டிய அவரது யோசனைகளையும் முடிந்தால் தானே அந்தப் பிரச்ச்சினையில் தலையிட்டு உதவி செய்வதாக முழு மனதுடன் கூறி அதற்கான செய்கைகளில் உடனே ஈடுபடுபவர்கள் நல்ல நண்பர்கள்.

நீங்கள் சொன்னதை கேட்டவுடன் தலையை வேறு பக்கம் திருப்பி யோசனை செய்தாலோ,பேச்சை வேறு திசைக்கு மாற்றினாலோ,கற்பனையான ஆபத்து பற்றி தவறான கருத்துக்களை கூறினாலோ,

தன்னால் முடியும் என்னும் சூழ்நிலை இருந்தும் தான் அது பற்றிக் கண்டு கொள்ளாமல் இருந்தாலோ,அல்லது அந்த குறிப்பிட்ட ஆபத்து சம்பந்தமாக ஏதேனும் அவருக்குத் தெரிந்த விசயத்தை மறைத்தாலோ.

இப்படிப் பட்டவர்களுக்கு வேறு திறமைகள் இருந்தாலும் இவர்களை விட்டு சட்டென்று விலகுங்கள்.இவர்களால் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உங்களுக்கு ஆபத்து தான்.

பெண்கள் விசயத்தில் உங்கள் நண்பர் எப்படி?
நல்ல நன்பர்கள் பெண்கள் விசயத்தில் கண்னியமாக நடந்து கொள்வார்கள்.நண்பர்களை நாம் நமது வீடு பெண்கள் முதலியோருடன் நண்பன் என்ற முறையில் அறிமுகப் படுத்தும் பொழுது அவர்களால் நமது வாழ்வில் தொல்லைகள் ஏதும் வந்து விடாமல் இருக்க நண்பர்களை இந்த விசயத்தில் ஆய்ந்து தெளிய வேண்டும்.

நண்பர்கள் நீங்கள் வீட்டில் இல்லாத சமயம் அது நன்றாகத் தெரிந்திருந்தும் உங்களைத் தேடி வீட்டிற்கு வருகின்றார்களா?வேறு நோக்கம் இருக்க வாய்ப்புண்டு.

 குடும்ப உறுப்பினர்களை விளிக்கும் போது உங்களது தாயை அவர்கள் அம்மா என்றும் தந்தையை அப்பா என்றும் விளிக்கின்றார்களா?உங்களது சகோதரி ,மனைவியை அவர்களும் சகோதரி முறையில் விளித்து பார்வை ,நடத்தையில் இருக்கின்றார்களா?

உங்கள் வீட்டுப் பெண்கள் இருக்கும் போது ஏதேனும் ஓவர் ஆக்ட் செய்கின்றார்களா?உங்கள் வீட்டுப் பெண்கள் முன்னிலையில் உங்களையே மட்டம் தட்டுகின்றாரா?

நீங்கள் உங்கள் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ,உங்கள் வீட்டுப் பெண்களின் விசயம் பற்றி சில குடும்ப நபர்களுக்கு மட்டுமே தெரிந்த விசயங்கள் பற்றிக் கேட்கின்றாரா?

இவர்களை தள்ளி வைக்க வேண்டும் ,பெண்களிடம் கண்ணியமாக நடக்கத்தெரியாதவருடைய நட்பு எப்பொழுதும் ஆபத்தை விளைவிக்கும்.இவர்களை ஆய்ந்து தெளிவுற வேண்டும்.

இப்படி நண்பர்களை தேர்ந்து தெளிவு செய்யாவிட்டால் நண்பர்களே தொல்லைகளாகி விடுவார்கள் .நாமும் இதில்கூறியுள்ள நல்ல நண்பனின் இலக்கணத்திற்குட்பட்டு நடக்க வேண்டும்.