நண்பர்களை சோதனை செய்யுங்கள்.
நல்ல நண்பர்கள் என்பவர்கள் நமது வாழ்வில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மோடு இணைந்து நமக்கு துண்பம் வரும் வேளையில் துணையாகவும் ,தகுந்த காலங்களில் நல்ல அறிவுரை கூறுபவர்களாகவும்,தவறான வழிகளை நாம் மேற்கொள்ளும் போது தவறை இடித்து உரைத்து நல்வழி உணர்த்துபவர்களாகவும் இருக்க வேண்டும்.
இப்படி நட்புக்கு இலக்கணம் கூறப்பட்டிருந்தாலும் நல்ல நண்பர்களை இனம் காணும் திறமையை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும் .
கல்விச் சாலைகள்,பணிபுரியும் இடங்கள்,உறவுப் பாலம் வழியாக,இது தவிர வேறு வழிகள் மூலமாக,இந்த வழிகளில் உள்ள நபர்கள் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆகவும் ,மாற்று பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆகவும் தான் நட்பு முகத்தோடு நம்மை அனுக முடியும்.
இவர்களில் நல்ல நண்பர்களை ஆய்ந்து கொள்ளும் முறைகள் தான் என்ன?நம்மிடம் மட்டும் ஆன உதவிகளைப் பெற்றுக் கொண்டு,கழற்றி விடுகின்ற ரகமா?
நமது பலவீனங்களைப் புரிந்து கொண்டு நம்மை அவர்கள் வாழ்விற்கு நம்மை அறியாமல் பயன்படுத்துகின்ற ரகமா?ஆபத்துக்காலத்தில் ஒடிவிடுகின்ற ரகமா?கூட இருந்தே கெடுக்கின்ற ரகமா?மகிழ்ச்சியை மட்டும் பங்கு கொள்கின்ற ரகமா?இப்படி பல வழிகளில் நண்பர்களை ஆய வேண்டும்.
உங்கள் நண்பர் பண விசயத்தில் எப்படி?
நீங்களும் உங்கள் நண்பரும் ஒரு விடுதிக்கு சாப்பிடச் செல்கின்றீர்கள் ,உங்கள் நண்பரும் பணம் வைத்திருக்கின்றார் நீங்களும் வைத்திருக்கின்றீர்கள் ,
சாப்பிட்ட பணம் கொடுக்கும் பொழுது நீங்கள் நட்பின் உந்துதல் காரணமாக பணத்தை நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என்று சர்வர் எப்பொழுது பில்லை வைப்பார் என்று காத்துக் கொண்டிருக்கின்றீர்கள் ,
உங்கள் நண்பரும் அதே போல காத்திருந்து பணத்தை நான் தான் கொடுப்பேன் என்று வம்பு செய்தால் அவர் பணவிசயத்தை விட நட்பை, உங்களை மதிக்கின்றார் என்று பொருள்.
ஆனால் சர்வர் வரும் நேரத்தைக் கணக்கிட்டு வேறு ஏதாவது காரியத்தில் கண்ணாக இருப்பது போல் பாசாங்கு செய்கின்றாரா?என்பதைக் கவணிக்க வேண்டும் .
சிலர் போன் பேசுவது போலவும்,தலையைத் திருப்பிக் கொண்டு தீவிரமாகச் சப்பிடுவது போலவும் இருந்தால் இப்படிப்பட்ட நபர் பண விசயத்தில் கெட்டி.
இவர்களை சரியாக மேலாண்மை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்கு துன்பத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
சில சமயங்களில் நண்பரிடம் பணம் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு நாமே அவர்களை கூட்டிக் கொண்டு சென்றிருந்தால் ,முதலில் அவர்கள் நம்முடன் வர கண்டிப்பாக மறுப்பார்கள்
நாம் வற்பறுத்தி கூட்டிச் சென்றாலும் எவ்வளவு பழகி இருந்தாலும் ஒரு சங்கோசத்துடன் இருப்பார்கள் அளவுடன் நடந்து கொள்ளுவார்கள்.
இதனை நினைத்துக் கொண்டே உங்களுக்கு ஏதாவது ஒரு பொருளை சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது வாங்கிக் கொடுப்பார்கள்.
இல்லை என்றால் உங்களை ஒருநாள் நீங்கள் எதிர்பாராமல் சாப்பிட அழைத்துச் செல்வார்கள் .இவர்கள் பண விசயத்தில் நல்ல நண்பர்கள்.
இப்படி பணம் சம்பந்தமாக முதலில் நண்பர்களை ஆய்ந்து தெளிய வேண்டும் .உங்கள் எண்ணத்திற்கு சரி வராதவர்களை ஒதுக்கக் கூடாது ,அவர்களை விட்டு தள்ளியும் இருக்கக்கூடாது .அவர்களுடன் இருந்து கொண்டே மேலாண்மை செய்யுங்கள் .
இந்த அவசர உலகில் ஒரு முறை ஏற்பட்டு விட்ட நட்பு அறிமுகம் எப்பொழுதாவது உபயோகமாக இருக்கும்.இல்லையென்றால் உங்களுக்கு தேவையான வேறு திறமைகள் கொண்டவராக இருக்கலாம் .அதனைத் தெரிந்து தெளிவு பெறவும்.
ஆபத்துக் காலத்தில் உதவுவாரா?இல்லை ஓடி ஒளிந்து விடுவாரா?
ஆபத்துக் காலத்தில் உதாவாதவன் நண்பனே கிடையாது .இப்படிபட்டவர்களை எப்படி தேர்ந்து தெளிவது.
திடீரென்று ஒரு நாள் உங்கள் நண்பனிடம் பொய் ஒன்றை சொல்லுங்கள் .உங்களுக்கு தனிப்பட்ட வாழ்வில் ஒரு மூன்றாம் நபரால் ஆபத்து வரப் போகின்றது என்று?அந்த ஆபத்து உங்கள் நண்பரைக் கூட பாதிக்கலாம் என்று சொல்லுங்கள்.
நீங்கள் சொன்னதை கேட்டவுடன் உங்களுக்கு நேரப் போகும் ஆபத்தைப் பற்றி ஆலோசணை கூறும் நோக்கத்தோடு அது பற்றி உங்களிடம் கேட்டு ,அந்த ஆபத்தை எதிர் கொள்ள வேண்டிய அவரது யோசனைகளையும் முடிந்தால் தானே அந்தப் பிரச்ச்சினையில் தலையிட்டு உதவி செய்வதாக முழு மனதுடன் கூறி அதற்கான செய்கைகளில் உடனே ஈடுபடுபவர்கள் நல்ல நண்பர்கள்.
நீங்கள் சொன்னதை கேட்டவுடன் தலையை வேறு பக்கம் திருப்பி யோசனை செய்தாலோ,பேச்சை வேறு திசைக்கு மாற்றினாலோ,கற்பனையான ஆபத்து பற்றி தவறான கருத்துக்களை கூறினாலோ,
தன்னால் முடியும் என்னும் சூழ்நிலை இருந்தும் தான் அது பற்றிக் கண்டு கொள்ளாமல் இருந்தாலோ,அல்லது அந்த குறிப்பிட்ட ஆபத்து சம்பந்தமாக ஏதேனும் அவருக்குத் தெரிந்த விசயத்தை மறைத்தாலோ.
இப்படிப் பட்டவர்களுக்கு வேறு திறமைகள் இருந்தாலும் இவர்களை விட்டு சட்டென்று விலகுங்கள்.இவர்களால் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உங்களுக்கு ஆபத்து தான்.
பெண்கள் விசயத்தில் உங்கள் நண்பர் எப்படி?
நல்ல நன்பர்கள் பெண்கள் விசயத்தில் கண்னியமாக நடந்து கொள்வார்கள்.நண்பர்களை நாம் நமது வீடு பெண்கள் முதலியோருடன் நண்பன் என்ற முறையில் அறிமுகப் படுத்தும் பொழுது அவர்களால் நமது வாழ்வில் தொல்லைகள் ஏதும் வந்து விடாமல் இருக்க நண்பர்களை இந்த விசயத்தில் ஆய்ந்து தெளிய வேண்டும்.
நண்பர்கள் நீங்கள் வீட்டில் இல்லாத சமயம் அது நன்றாகத் தெரிந்திருந்தும் உங்களைத் தேடி வீட்டிற்கு வருகின்றார்களா?வேறு நோக்கம் இருக்க வாய்ப்புண்டு.
குடும்ப உறுப்பினர்களை விளிக்கும் போது உங்களது தாயை அவர்கள் அம்மா என்றும் தந்தையை அப்பா என்றும் விளிக்கின்றார்களா?உங்களது சகோதரி ,மனைவியை அவர்களும் சகோதரி முறையில் விளித்து பார்வை ,நடத்தையில் இருக்கின்றார்களா?
உங்கள் வீட்டுப் பெண்கள் இருக்கும் போது ஏதேனும் ஓவர் ஆக்ட் செய்கின்றார்களா?உங்கள் வீட்டுப் பெண்கள் முன்னிலையில் உங்களையே மட்டம் தட்டுகின்றாரா?
நீங்கள் உங்கள் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ,உங்கள் வீட்டுப் பெண்களின் விசயம் பற்றி சில குடும்ப நபர்களுக்கு மட்டுமே தெரிந்த விசயங்கள் பற்றிக் கேட்கின்றாரா?
இவர்களை தள்ளி வைக்க வேண்டும் ,பெண்களிடம் கண்ணியமாக நடக்கத்தெரியாதவருடைய நட்பு எப்பொழுதும் ஆபத்தை விளைவிக்கும்.இவர்களை ஆய்ந்து தெளிவுற வேண்டும்.
இப்படி நண்பர்களை தேர்ந்து தெளிவு செய்யாவிட்டால் நண்பர்களே தொல்லைகளாகி விடுவார்கள் .நாமும் இதில்கூறியுள்ள நல்ல நண்பனின் இலக்கணத்திற்குட்பட்டு நடக்க வேண்டும்.
உங்கள் வீட்டுப் பெண்கள் இருக்கும் போது ஏதேனும் ஓவர் ஆக்ட் செய்கின்றார்களா?உங்கள் வீட்டுப் பெண்கள் முன்னிலையில் உங்களையே மட்டம் தட்டுகின்றாரா?
நீங்கள் உங்கள் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ,உங்கள் வீட்டுப் பெண்களின் விசயம் பற்றி சில குடும்ப நபர்களுக்கு மட்டுமே தெரிந்த விசயங்கள் பற்றிக் கேட்கின்றாரா?
இவர்களை தள்ளி வைக்க வேண்டும் ,பெண்களிடம் கண்ணியமாக நடக்கத்தெரியாதவருடைய நட்பு எப்பொழுதும் ஆபத்தை விளைவிக்கும்.இவர்களை ஆய்ந்து தெளிவுற வேண்டும்.
இப்படி நண்பர்களை தேர்ந்து தெளிவு செய்யாவிட்டால் நண்பர்களே தொல்லைகளாகி விடுவார்கள் .நாமும் இதில்கூறியுள்ள நல்ல நண்பனின் இலக்கணத்திற்குட்பட்டு நடக்க வேண்டும்.


No comments:
Post a Comment